Saturday, 9 May 2015

இணையதள பொருளியல்

இணையதள பொருளியல்

 

பிளாட்பாரம் பொருளியல் என்று ஒன்று உண்டு. ஒரு தொடர் வண்டி நிலையத்தில் ஒவ்வொரு பிளாட்பாரமும் ஒரு தனியார் நிறுவ னத்துக்கு சொந்தம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிளாட்பாரத்தை இரண்டு குழுக்கள் பயன்படுத்துவர். ஒன்று, பயணிகள் மற்றொன்று தொடர் வண்டி நிறுவனங்கள். 

பிளாட்பார உரிமையாளர் பயணிகளிடமும் தொடர் வண்டி நிறுவனத்திடமும் கட்டணம் வசூலிக்கலாம். அதிக தொடர்வண்டி வரும் பிளாட்பாரத்துக்கு அதிக பயணிகள் வருவார்கள். அதே போல் அதிக பயணிகள் வரும் பிளாட்பாரத்துக்கு அதிக தொடர்வண்டிகள் வரும். இதில் 3 வகை செயல்பாடுகள் இருக்கலாம். 


1. A என்ற பிளாட்பார நிறுவனம் பயணிகளிடம் கட்டணம் வாங்காமல் தொடர்வண்டியிடம் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது. A பிளாட்பாரத்தில் அதிக பயணிகள் வருவர் ஏனெனில் பிளாட்பார கட்டணம் இல்லை. எந்தெந்த தொடர் வண்டியால் கட்டணத்தைக் கொடுக்கமுடியுமோ அந்த தொடர்வண்டிகள் மட்டுமே A பிளாட்பாரத்திற்கு வருகின்றன அவை மட்டுமே பயணிகளின் தேவைக்கு கிடைக்கும். அத்தொடர்வண்டிகளும் தாங்கள் பயணிகளிடம் வசூலிக்கும் பயணக்கட்டணத்தில் இதையும் சேர்த்துதான் வாங்கும். 



2. B என்ற பிளாட்பார நிறுவனம் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வாங்கிக் கொண்டு, தொடர்வண்டிகளிடம் கட்டணம் வாங்குவதில்லை. B பிளாட்பாரத்தில் எல்லா தொடர்வண்டிகள் வந்தாலும், பணம் இருக்கும் பயணிகள் மட்டுமே கட்டணம் செலுத்தி அந்த தொடர் வண்டிகளை பயன்படுத்த முடியும். ஏழை கள் வெளியே இருக்கவேண்டியது தான்.
3. C என்ற பிளாட்பாரத்தில் பயணி களிடமும் தொடர்வண்டிகளிடமும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இதில் இரு குழுவிலும் பணம் இருக்கும் பகுதியினர் மட்டுமே பிளாட்பார வசதியை பயன்படுத்த முடியும். பயணி களும், தொடர்வண்டிகளும் சேர்ந்து கட்டணம் செலுத்தும் போது அவர் அவர் பொருளாதார நிலைக்கேற்ப கட்டணம் வசூலிக்கலாம்.
எது சிறந்தது? 

 
இந்த மூன்றில் எது சிறந்தது? சூழ்நிலைக்கேற்ப இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பேருந்து நிலையங்கள் மேலே குறிப் பிட்ட முதல் செயல்முறையைக் கொண் டது. அரசு பேருந்து நிலைய வசதி எல்லா பயணிகளுக்கும் இலவசமாக கொடுக்கவேண்டும் என்று கட்டணம் வசூலிக்காமல், ஒவ்வொரு பேருந்து நிறுவனத்திடமும் அக்கட்டணத்தை வசூலிக்கிறது. அக்கட்டணத்தையும் சேர்த்துத்தான் நமது பயணக்கட்டணத்தை பேருந்து வசூலிக்கிறது. உலகில் எதுவும் இலவசம் இல்லை. 


டி.வி. சேனல் கட்டணங்கள் 

 
இதே போன்றதொரு நிலையை நாம் TataSky, Dish TV, Sun Direct போன்ற Direct-To-Home (DTH) தொலைக்கட்சி சேவையில் பார்க்கலாம். DTH நிறுவனத்துக்கு இரண்டு பக்கமும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு புறம் Channelகள் மற்றொருபுறம் பார்வை யாளர்கள். TRAI என்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு என்ன செய்திருக்கிறது? ஒவ்வொரு DTH நிறுவ னமும் ஒரு குறைந்தபட்ச கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சேனல்களை கொடுக்கவேண்டும். அதற்கு கூடுதலாக உள்ள சேனல்களுக்கு பார்வையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் சமநிலை அல்லது நடுநிலை என்பது எங்கு உள்ளது? 

இணைய சமநிலை 
 
இதேதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இணைய சமவாய்ப்பு (Net Neutrality) என்பதும். ஒவ்வொரு இன்டர்நெட் நிறுவனமும் இரு வகை வாடிக்கையாளர்களிடையே உள்ளது. ஒரு புறம் தகவல் அளிக்கும் இணையதள நிறுவனம் மற்றொருபுறம் இணையதள உபயோகிப்பாளர்கள். ஒரு நிறுவனத் திடம் அதிக உபயோகிப்பாளர்கள் இருந்தால் அதிக இணையதள நிறுவ னங்கள் வரும். அதே போல் ஒரு நிறுவனத்திடம் அதிக இணையதள நிறுவனங்கள் இருந்தால் அதிக உபயோகிப்பாளர்கள் வருவார்கள். இந்த இரு குழுக்களிடமும் கட்டணம் வசூலிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. 

எது சமவாய்ப்பு? 
 
நீங்கள் வாங்கும் இன்டர்நெட் தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட டேட்டா (data) அளவு வரை டவுன்லோடு வேகம் அதிகமாக இருக்கும், அந்த டேட்டா அளவை தொட்டவுடன் டவுன்லோடு வேகம் குறைந்துவிடும். அதே போல்தான் இலவசமாக டேட்டா டவுன்லோடை அதிக வேகத்தில் வழங்கும் இன்டர்நெட் பிளாட்பாரம்கள் ஒரு சில இணையதளத்தை இலவச மாக வழங்கி மற்றவற்றை ஒரு கட்டணத்திற்கு வழங்குவார்கள். இந்த பிளாட்பாரம் பொருளியல் பின்புலத் தில்தான் சமவாய்ப்பு என்ன என்பதை விளக்கவேண்டும். 


எல்லா தகவல் நிறுவனங்களும் இலவசமாக தங்களின் இணையதளங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றால், இன்டர்நெட் நிறுவனத்தின் bandwidth அதிகமாக்கவேண்டும். இதற்கு உபயோகிப்பாளர்கள் மேலும் அதிக கட்டணம் செலுத்தவேண்டி வரும். அதனால் இன்டர்நெட்டை எல்லோ ருக்கும் எடுத்துச் செல்லமுடியாது. குறிப்பாக மாணவர்கள், கிராமப்புற உபயோகிப்பாளர்கள் அதிக கட்டணம் செலுத்தமுடியாது. உபயோகிப் பாளர்களின் கட்டணத்தை குறைத்தால், இணையதள நிறுவனங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவேண்டும். இதனால் சிறிய இணையதள உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 


சிறிய இணையதள உரிமை யாளர்களும் பாதிக்கப்படக் கூடாது, குறைந்த கட்டணத்தில் உபயோகிப் பாளருக்கு இன்டர்நெட் வசதி கொடுக்கவேண்டும் என்றால் DTH TV சந்தையில் இருப்பது போன்ற ஒரு செயல் முறை தேவை. அதாவது, சில இணையதளங்களை இலவசமாகக் கொடுப்பது. இதிலும் பெரிய பிரச்சினைகள் உண்டு. எதை இலவசமாக கொடுக்கவேண்டும்? தகவல் பரிமாற்றத்திற்கு தேவைப்படும் வாட்ஸ்அப், டிவிட்டர் அல்லது செய்தி தாள்கள்? தினம் வரும் ஆயிரக்கணக்கான புதிய இணைய தளங்களை எப்படி இனம் கண்டு சேர்ப்பது? என்ற பல கேள்விகளுக்கு நாம் விடை அளிக்கவேண்டும். 


பொருளியல் ரீதியில் இணைய சமநிலைக்கு ஏற்ப எல்லா இணைய தள வசதிகளும் சமஅளவில் கொடுக்கப் பட்டால் இணையதள நிறுவனங்கள் தங்கள் தொலைபேசி சேவைக்கான சந்தையை இழக்கக்கூடும். இது கூட இணையதள சேவைக்கான கட்டணத்தை உயர்த்த ஒரு காரணமாகிவிடும்.
இணைய சமவாய்ப்புகளினால் சமுதா யத்திற்கு நல்லதா? என்ற கேள்விக்கு பொருளியலில் தீர்மானமாக பதில் இல்லை. எல்லா இணையதள சேவை களையும் இலவசமாகக் கொடுக்கும் போது, அதிக bandwidth தேவைப்படும் யூடியூப், ரேடியோ போன்றவை பாதிப்புக்கு உள்ளாகும். 


அதே நேரத்தில் அதிக bandwidh இலவசமாக கொடுக்க தொலைதொடர்பு நிறுவனங்களிடம் முதலீடு இருக் காது. கட்டணம் கொடுக்கும் இணைய தளங்களை மட்டுமே கொடுத்தால், மக்களுக்குத் தேவைப்படும் பல இணையதளங்கள் கிடைக்காமல் போகும். பொருளியலின் தொடர் ஆராய்ச்சி மட்டுமே இதற்கு பதில் சொல்லவேண்டும்.



Saturday, 8 November 2014

புதிய வைரஸ் ஹெலுவா(helluva)

புதிய வைரஸ் ஹெலுவா(helluva)

ppH075E.jpg


மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் புதியதாக, வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் helluva. இது பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் ஒன்று மூலம் வேகமாகப் பரவுகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரை, வைரஸை அனுப்பியவர்கள், முழுமையாகத் தங்கள் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியும். தற்போதைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் தான் இது தென்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்தாலும், இது பரவலாகவே பன்னாடுகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் 8, விண்டோஸ் 7, சர்வர் 2012, விண்டோஸ் ஆர்.டி. மற்றும் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களை மிக எளிதாக இது பாதிக்கிறது. 

இதில் சிக்காமல் இருக்க, நீங்கள் அறியாத ஒருவரிடமிருந்து மின் அஞ்சல் இணைப்பாக பிரசண்டேஷன் பைல் மற்றும் பிற பைல்கள் வந்தால், அதனைத் திறக்க வேண்டாம். தெரிந்தவரிடம் இருந்தே வந்தாலும், அவரைத் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திய பின்னரே, பைலைத் திறக்கவும். அதே போல, குறிப்பிட்ட பைல் ஒன்றைத் திறக்க, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை தேவை என, நீங்கள் அறியாத பைல் ஒன்றுக்குக் கேட்டால், அனுமதி தர வேண்டாம். Window's User Account டூலை உங்கள் கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருக்கவும்.

இந்த வைரஸ் நுழையும் பிழைக் குறியீடு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் (Power Point's OLE) சார்ந்ததாகும். இது ஸ்ப்ரெட் ஷீட் போன்றவற்றை பவர்பாய்ண்ட் பைலில் இணைக்க உதவும் குறியீடு ஆகும். பொதுவாக, இந்த டூல் சார்ந்த குறியீடு, மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கும். ஆனல், இதில் யாரோ சிலர், பிழைக் குறியீட்டு வரிகளைக் கண்டறிந்து, அதன் வழி இந்த வைரஸைப் பரப்பி வருகின்றனர். இது குறித்து, மைக்ரோசாப்ட் தரும் அறிக்கையினைப் படிக்க, https://technet.microsoft.com/library/security/3010060 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

 

Monday, 3 November 2014

கூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்

கூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்

vVvYWT4.jpg?1


கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்ட ஜிமெயிலைத் திருத்தி அமைக்கும் பணியில் கூகுள் இறங்கியுள்ளது. 

ஜிமெயில் பயன்படுத்தாதவர்களை, இக்காலத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் அனைவருமே ஜிமெயில் பயனாளர்களாக இருக்கிறோம். இருப்பினும் சில பிரச்னைகளை இதன் மூலம் நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். சில்லரை வர்த்தகர்களின் விளம்பர அஞ்சல்கள், ஸ்பாம் மெயில்கள், மால்வேர்களைத் தாங்கி வரும் மெயில்கள் போன்ற பல வேண்டத்தகாத, நாம் விரும்பாத அஞ்சல்கள் தொடர்ந்து நம் அஞ்சல் இன்பாக்ஸ் பெட்டியில் வந்து விழுகின்றன. இவற்றின் இடையேதான், நமக்கு முக்கியமான நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சல்களும் வருகின்றன. இதனால், சில வேளைகளில் நமக்குத் தேவையான அஞ்சல்கள நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த பிரச்னைகளைத் தீர்க்கவே, கூகுள் புதியதாக இன்பாக்ஸ் என்ற அப்ளிகேஷனைத் தருகிறது.


இன்பாக்ஸ் எனப் பெயரிடப்பட்டாலும், இது ஜிமெயிலின் இன்பாக்ஸ் வசதியை மட்டும் கொண்டிருக்காது. இதன் மூலம் நம் விமானப் பயணங்கள், நமக்கு வர வேண்டிய பொருட்கள், நினைவூட்டல்கள் என்பன போன்றவற்றையும் இதில் நிர்வாகம் செய்திடலாம். ஜிமெயிலை வடிவமைத்து பராமரிப்பவர்களே, இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனையும் வடிவமைத்துள்ளனர் என்றாலும், இது முற்றிலும் மாறுபட்ட கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், அதிகமான பணிகளை மேற்கொள்ளும் என கூகுள் நிறுவனத்தில் அண்மையில் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட சுந்தர் பிச்சை தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார். 
புதிய இன்பாக்ஸ், ஜிமெயிலுக்கு மாற்றானது அல்ல. ஏற்கனவே நமக்குக் கிடைக்கும் இன்பாக்ஸினை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது. ஜிமெயில் நமக்கு அறிமுகமாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 
நாம் பல வகைகளில், பரிமாணங்களில் நம் பணிக் கலாச்சாரத்தினை மாற்றி வளப்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் வாழ்வோடு இணைந்த ஜிமெயில் மாற்றம் பெறாமல் இருந்து வருகிறது. அதற்கு வளமையான மாற்றம் தரும் ஒரு முயற்சி தான் இந்த இன்பாக்ஸ்.




”முன்பிருந்த காலத்தைக் காட்டிலும், இப்போது அதிகமான எண்ணிக்கையில் நம் அக்கவுண்ட் இன்பாக்ஸில் மெயில்கள் குவிகின்றன. நமக்கு வரும் முக்கிய அஞ்சல்களும், இந்த குப்பையில் மாட்டிக் கொள்கின்றன. இதனால், ஏற்படும் சிறிய இடைவெளிகளில், நமக்கு வரும் மிக முக்கிய அஞ்சல்கள் நழுவிப் போகலாம். குறிப்பாக, நாம் நம் மொபைல் போன்கள் வழி, அஞ்சல்களைப் பார்க்கையில், இந்த தவறுதல்கள் ஏற்படுகின்றன. இங்கு நமக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதே புதிய இன்பாக்ஸ்” என கூகுள் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இன்பாக்ஸ் நமக்கு வந்திருக்கும் அஞ்சல் செய்திகளை, தொகுப்புகளாகப் பிரித்து வைக்கிறது. Social, Promotions, and Finance என்பன போன்ற பிரிவுகளில் அடுக்குகிறது. இத்துடன் நமக்கான முக்கிய தகவல்களை ஹைலைட் செய்து காட்டுகிறது. ஏதேனும் நிகழ்வு குறித்த தகவல்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுப்பிய போட்டோக்கள் சார்ந்த தகவல்கள் என்பன போன்றவற்றைக் கோடி காட்டி, நாம் எவற்றை உடனே பார்க்க வேண்டும், சிறிது நாள் கழித்து பார்க்கலாம், பார்க்கவே வேண்டாம் எனப் பல வகைகளில் பிரித்துக் காட்டுகிறது. (இதன் பல்வேறு பணிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://www.youtube....zNTjpUMOp4#t=19 என்ற முகவரியில் உள்ள காணொளிக் காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்)








இன்பாக்ஸ் பெறும் வழி

இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனப் பயன்படுத்திப் பார்க்க, கூகுள் குறிப்பிட்ட ஜிமெயில் பயனாளர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. அழைப்பு பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள் மூவருக்கு, இதே போன்ற அழைப்பினை அனுப்பலாம். அவர்கள் இதே போல பயன்படுத்திப் பார்த்து, மேலும் மூவருக்கு அனுப்பலாம். இப்படித்தான், முதலில் ஜிமெயில் நமக்கு அறிமுகமாகியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அழைப்பிதழ் வேண்டும் அஞ்சல் ஒன்றை inbox@google.com என்ற முகவரிக்கு அனுப்பி, காத்திருந்து அழைப்பினைப் பெறலாம்.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்து, அழைப்பிதழ் ஒன்றைப் பெற்றால், உங்கள் சாதனத்திற்கேற்ப, கூகுள் பிளே அல்லது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோருக்கு லிங்க் கிடைக்கும். டெஸ்க்டாப் பதிப்பினை inbox.google.com என்ற தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி கிடைக்கும். (Google Apps புரோகிராமினைத் தங்கள் வர்த்தக பயன்பாட்டுக்குக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த இன்பாக்ஸ் கிடைக்காது.)


 http://i.imgur.com/ebx7dtF.png




இன்பாக்ஸ் தற்போது இருக்கும் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு மாற்றாகத் தரப்படவில்லை. ஜிமெயில் உடன் இணைந்தே இதனைப் பயன் படுத்த வேண்டும். ஆனால், புதிய அனுபவமும், செயல்பாடுகளும் வசதிகளையும் இது தரும். ஆச்சரியம் தரும் செயல்பாடு முதல் நோக்கில், இந்த இன்பாக்ஸ், நமக்கு ஆச்சரியத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு, வண்ணங்கள் என கிறங்க அடிக்கிறது. நம்முடைய மெசேஜ் அனைத்தும் அவை கிடைக்கப்பெற்ற நாள் வாரியாக அடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அஞ்சல்கள் மேலாக அமைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து முன் தினம் மற்றும் இந்த மாதம் என வரிசை செல்லும். இது மட்டுமின்றி, ஒவ்வொரு அஞ்சலுக்கும் ஓர் அடையாளம் தரப்பட்டு வகைப்படுத்தப்படும். புதிய அஞ்சல் ஒன்று வரும்போது, அது உடனடியாக வகைப்படுத்தப்பட்டு, அந்த தொகுதி புதியதாகக் காட்டப்படும்.


ஏற்கனவே டெஸ்க்டாப் அஞ்சலில் நாம் பெற்றிருப்பது போல Social and Promotions என்ற இரு வகைகள், போனில் நாம் பார்க்கும் இன்பாக்ஸிலும் கிடைக்கும். புதியதாக Finance என்று ஒரு வகை தரப்படுகிறது. நாம் செலுத்த வேண்டிய பில்கள், கடிதங்கள் ஆகியவை இந்தப் பிரிவில் இணைக்கப்படும். நாம் வாங்கிய பொருட்கள் குறித்த அஞ்சல்களில் உள்ள எண்கள், ரசீதுகள் அறியப்பட்டு, அவையும் தொகுக்கப்படும். Travel என்ற வகையின் கீழ், நம் பயணவிபரம், விடுதிகளில் அறைகள் பதிவு சார்ந்த அஞ்சல்கள் அடுக்கப்படும். இவை அப்டேட் செய்யப்படுகையில், சரியாக முந்தைய அஞ்சல்களுடன் இணைக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் அறை வேண்டி முன்கூட்டியே பதிவு செய்தது, உறுதி செய்யப்பட்டு ஒரு கடிதம் வந்தால், Travel என்னும் தொகுதி, இன்பாக்ஸில் முன்னதாகக் காட்டப்படும். மேலோட்டமாக, தங்கும் விடுதியின் பெயர், நாள் போன்ற தகவல்கள் காட்டப்படும். அதன் மீது கிளிக் செய்தால் அல்லது தட்டினால், உடன் இணைந்த அனைத்து கடிதங்களும் காட்டப்படும். அத்துடன் இல்லாமல், இந்த விடுதி இருக்கும் ஊருக்கு நீங்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், அவையும் காட்டப்படும். இதற்கென பயண ஏஜெண்ட் ஒருவர் உதவி பெற்று, ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், அவருடனான அஞ்சல் தொடர்புகளும் காட்டப்படும். இதனால், ஒரே பார்வையில் தொடர்பான அனைத்து தகவல் களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.



பட்டன்கள் அறிமுகம்


இன்பாக்ஸில் வரிசையாகப் பல பட்டன்கள் அறிமுகம் ஆகின்றன. முதலில் இவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால், பயன்படுத்திப் பார்க்கையில், இவை தரும் வசதிகளை நாம் விரும்புவோம். இதனைப் பயன்படுத்தி, மொத்தமாக சில அஞ்சல்களை பார்த்ததாக ஒதுக்கலாம். இன்னும் ஆழமாகப் பொறுமையாகப் படிக்க வேண்டும் எனத் திட்டமிடுபவற்றை, இன்பாக்ஸில் பின் அப் செய்து அமைக்கலாம். இந்த அஞ்சல், Promos அல்லது Social வகையில் செல்லக் கூடியதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட அஞ்சல் மட்டும், தனியாக வேறுபடுத்திக் காட்டப்படும். பின் அப் செய்து வைத்த அஞ்சலை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், பட்டனில் கிளிக் செய்திடலாம்; அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்திடலாம். மீண்டும் பின்னால் பார்க்க வேண்டும் என எண்ணினால், Done டேப் அழுத்தி ஒதுக்கி வைக்கலாம். 


அஞ்சல் ஒன்றுக்கு பதிலளித்தல், முன்னோக்கி பிறருக்கு அனுப்புதல் மற்றும் புதிய அஞ்சல்களை உருவாக்குதல் ஆகியவை சற்று சிரமம் எடுத்துச் செய்திடல் வேண்டும். பதில் அனுப்ப அல்லது முன்னோக்கி பிறருக்கு அனுப்ப, அந்த அஞ்சலினைத் திறக்க வேண்டும். இமெயில் ஹெடர் பகுதியில், அல்லது அதற்கும் மேலாக, மூன்று புள்ளிகளுடன் ஒரு பட்டன் கிடைக்கும். இன்னொரு பட்டன், அஞ்சல் நம்மை வந்தடைந்த நேரம் அருகே காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால், அல்லது தட்டினால், அஞ்சலுக்கான பதில் அனுப்பலாம்; அல்லது முன்னோக்கிப் பிறருக்கு அனுப்பலாம்.

இன்பாக்ஸில் இருந்தபடியே, அஞ்சல் ஒன்றுக்குப் பதில் அனுப்ப விரும்பினால், அஞ்சலில் கிடைக்கும் சற்றுப் பெரிய அளவிலான சிகப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ள + பட்டனை அழுத்த வேண்டும். நீங்கள் அண்மையில் தொடர்பு கொண்ட முகவரிகள் அனைத்தும் ஐகான்களாகக் காட்டப்படும். இவற்றில் தேவையான ஒன்றில் கிளிக் செய்தால், தட்டினால், உடன் அது கிடைக்கும். 

புதியதாக ஒரு மெசேஜ் அமைக்க வேண்டும் என்றால், சிகப்பு வண்ணத்தில் தரப்பட்டுள்ள பென்சில் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அஞ்சல் எழுதுவதில் ஜிமெயில் தரும் அனைத்து வசதிகளும் இன்பாக்ஸில் தரப்படவில்லை. எடுத்துக் காட்டாக, ட்ரைவிலிருந்து நேரடியாக பைல் ஒன்றை அப்லோட் செய்திட முடியாது. 



நினைவூட்டல் மற்றும் கிடப்பில் போடுதல் (Reminders and Snooze)


இன்பாக்ஸ் தரும் இரண்டு புதிய சிறப்பு அம்சங்கள் இவையாகும். இவை புதியவையா என்ற கேள்வி நிச்சயம் நம் மனதில் எழும். ஏனென்றால், Reminders என்பது ஏற்கனவே உள்ள Tasks என்பதைப் போன்றதே. அதே போல Snooze என்பது Boomerang add-on என்பதற்கு இணையானது. ஆனால், இன்பாக்ஸ் சற்று சிறப்பாக இரண்டையும் இணைக்கிறது. இன்பாக்ஸின் டெஸ்க்டாப் பதிப்பில், அஞ்சல் மீது நம் கர்சரைக் கொண்டு சென்று, அப்போது கிடைக்கும் கடிகார ஐகான் மீது கிளிக் செய்தால், அஞ்சல் ஒன்றை snooze செய்வதற்கான ஆப்ஷன்கள் கிடைக்கும். மொபைல் போன் பதிப்பில், அஞ்சல் மீது இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், இந்த ஆப்ஷன் கிடைக்கும். உடனடியாக சில அஞ்சல்களுக்குப் பதில் அளிக்க இயலாது. பதில் அளிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். அது போன்ற அஞ்சல்களைக் கையாள இந்த ஆப்ஷன்கள் மிகவும் உதவியாக இருக்கும். Reminders டூல், நம் செயல்பட வேண்டிய அஞ்சல்களை மேலாகத் தெரியும் வகையில் அமைக்க உதவுகின்றன. நினைவூட்டல் ஒன்றை அமைக்க, சிகப்பு வண்ணத்தில் உள்ள + பட்டனை கிளிக்க் செய்திட வேண்டும். பின்னர், ஊதா நிறத்தில் காட்டப்படும் விரல் ஐகானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து, அதற்கான நேரத்தையும் அமைக்க வேண்டும். மொபைல் பதிப்பில், இருக்கும் இடம் அடிப்படையில் இந்த ஆப்ஷனை அமைத்திடலாம். இதற்கு லொகேஷன் செட்டிங்ஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டும். Google Now டூல் நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் அமைத்த நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும்.



தொகுப்புகள் (Bundles)

தற்போது ஜிமெயில் தரும் tabs போன்றவை இவை. ஆனால், இப்போது கூடுதலாகச் சில வகைகள் (categories) சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகளின் பெயரைக் கொண்டு, நீங்கள் காண வேண்டிய, அஞ்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கலாம்.


உதவிக் குறிப்புகள் (Assists)


இது ஒரு புதிய வசதி. நினைவூட்டல்கள், அஞ்சல்கள் ஆகியவை சார்ந்த உதவிக் குறிப்புகள், (தொலைபேசி எண்கள், முகவரிகள்) அவற்றுடன் இணைக்கப்படும். எடுத்துக் காட்டாக, விடுதி ஒன்றில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திட, அஞ்சல் அனுப்பினால், நினைவூட்டல் ஏற்படுத்தினால், அதனுடன், அந்த விடுதியின் முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை இணைக்கப்படும். 




முக்கியத் தகவல்கள் (Highlights)

ஒரே பார்வையில், ஓர் அஞ்சல் குறித்துத் தெரிந்து கொள்ள இந்த Highlights இணைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு இணைப்பு, போட்டோ அல்லது டாகுமெண்ட், எந்த மெயிலுடன் உள்ளது என்று தேட வேண்டியதில்லை. அதன் சிறிய நக அளவு படம், அது இருப்பதனைக் காட்டிக் கொடுக்கும். அஞ்சலை அடையாளம் கண்டு திறந்து பார்க்க முடியும்.

சற்று கவனித்து கற்கவும் உங்கள் அஞ்சல்களை நிர்வகிப்பதில், இன்பாக்ஸ் சற்று வித்தியாசமான அணுகுமுறையை உங்களுக்குத் தருகிறது. இதனைக் கற்றுக் கொள்ள சிறிது காலம் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால், ஓரிரு நாட்களில் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். வழக்கமான முறையில், நேரப்படி வரிசையாக அமைந்தவற்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், இப்போது உள்ள முறையே உங்களுக்குப் போதுமானது. ஆனால், உங்களுக்கு வரும் இமெயில்கள், திறந்த வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் போல உங்கள அழுத்துவதாக இருந்தால், புதிய இன்பாக்ஸ் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். அதனைக் கற்றுக் கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொள்வது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பயன்களைத் தரும்.

 

Wednesday, 17 September 2014

சாம்சங் வழங்கும் கல்வி இணையம்

சாம்சங் வழங்கும் கல்வி இணையம்

 

vBqCYdT.png

சாம்சங் நிறுவனம் இந்தியாவில், முதல் முதலாக கல்விக்கென அப்ளிகேஷன் ஒன்றைத் தந்துள்ளது.  மாணவர்கள் இதனை இயக்கி, பாடங்கள் சார்ந்த தங்கள் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். 'Samsung Smart Learning' என இதனை சாம்சங் பெயரிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் MSC (Media Solutions Center) பிரிவு இதனை வடிவமைத்து இயக்குகிறது.


இது ஒரு க்ளவ்ட் அமைப்பிலான அப்ளிகேஷன் தீர்வாக இருக்கும். இது 2ஜி மற்றும் 3ஜி பார்மட்களில் கிடைக்கும். அனைத்து சாம்சங் டேப்ளட் பி.சி.க்கள் மூலமாக இதனைப் பெறலாம்.  இந்தப் பிரிவில், இந்தியாவில் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் பயிலும் 7 கோடி மாணவர்களுக்கு வகுப்பு 1 முதல் 12 வரையிலான  பாடக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்திடும் 45 லட்சம் மாணவர்களுக்கும், தேர்வுக் குறிப்புகள் இதில் கிடைக்கின்றன. மற்ற கல்வி திட்டங்களில் பயில்வோருக்கும் விரைவில் பாடக் குறிப்புகள் இதே போன்ற  அப்ளிகேஷன் வழியாக வழங்கப்படும். 

இந்த அப்ளிகேஷனில், வகுப்பறைகளில் ஆசிரியர்களால் தரப்படும் பாடக் குறிப்புகளுக்குக் கூடுதலான விளக்கங்கங்கள் தரப்படும். ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு மாணவரும் இதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பயன் பெறலாம். பள்ளிகளுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சாம்சங் இந்தியா முயற்சித்து வருகிறது. 
இந்த பாடக் குறிப்புகளை எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, சாம்சங் விற்பனை மையங்கள் வழியாக விற்பனை செய்திடவும் சாம்சங் 
இந்தியா நிறுவனம் திட்டமிடுகிறது. இது போன்ற க்ளவ்ட் அமைப்பில் கல்வி சார்ந்த பாடக் குறிப்புகளைத் தரும் முயற்சி, இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 


அண்மையில், சாம்சங் நிறுவனம், இந்திய வாடிக்கையாளருக்கு மட்டும் என தனியே ஒரு அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியது. இதில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்கள் மட்டும் கிடைக்கும். மொத்தமாக லட்சக் கணக்கில் அப்ளிகேஷன்களை வைத்துத் தருவதனைக் காட்டிலும், எவை முக்கியமாகத் தேவைப்படுமோ, அந்த அப்ளிகேஷன்களை மட்டும் கொண்டு ஸ்டோர் இயக்குவது நல்லது என்று சாம்சங் கருதுகிறது. 




LINK:  
 http://www.samsung.com/in/business/solutions-services/mobile-solutions/education/samsung-smart-school